/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரிகரையில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை
/
ஏரிகரையில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ஏரிகரையில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ஏரிகரையில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2025 01:23 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் வீராணம் ஏரியின் மேல்புற கரையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி அருகே துவங்கும் வீராணம் ஏரியின் மேல்கரை வட்டத்துார், குடிகாடு, புடையூர், சோழத்தரம், வானமாதேவி, அறந்தாங்கி, கருணாகரநல்லுார் வரை உள்ளது. ஏரியின் மேல்புறகரையையொட்டி கோதாவரி வாய்க்கால் உள்ள நிலையில் இடையில் செம்மண் கிராவல் கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை மழைக் காலங்களில் அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்வதற்காக சாலை போட்பட்டதாகும். சாலையின் இருபுறமும் சீமை கருவேல முட்புதர்கள் அதிகளவில் படர்ந்து புதர்மண்டி போல் காணப்படுகிறது.
இந்த சாலையை விவசாயிகள் தங்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியின் மேல்கரையில் முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.