/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையில் மூழ்கிய நெற்பயிர்கள் புவனகிரி பகுதி விவசாயிகள் கவலை
/
மழையில் மூழ்கிய நெற்பயிர்கள் புவனகிரி பகுதி விவசாயிகள் கவலை
மழையில் மூழ்கிய நெற்பயிர்கள் புவனகிரி பகுதி விவசாயிகள் கவலை
மழையில் மூழ்கிய நெற்பயிர்கள் புவனகிரி பகுதி விவசாயிகள் கவலை
ADDED : செப் 27, 2025 02:21 AM

புவனகிரி : புவனகிரி அருகே திடீரென பெய்த மழையால் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
புவனகிரி அடுத்த அம்பாள்புரம், பிரசன்னராமாபுரம், உளுத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன் 100 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இப்பகுதிகளில் பெய்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லை. பொதுப்பணித் துறை அதிகாரிகள் பெயரளவில் வாய்க்கால்களை துார்வாரினர். இதனால் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரசன்னராமாபுரத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்காக பாலம் கட்டுவதற்கு பொருட்கள் எடுத்து செல்ல வாய்க்காலை தடுத்து, தடுப்பணை கட்டினர். அந்த அணையை திறந்து விடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் மழைநீர் வடியாமல் வயல்களில் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது' என்றனர்.