/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உளுந்து பயிரில் நோய் தாக்குதல் மாவட்ட விவசாயிகள் கவலை
/
உளுந்து பயிரில் நோய் தாக்குதல் மாவட்ட விவசாயிகள் கவலை
உளுந்து பயிரில் நோய் தாக்குதல் மாவட்ட விவசாயிகள் கவலை
உளுந்து பயிரில் நோய் தாக்குதல் மாவட்ட விவசாயிகள் கவலை
ADDED : ஆக 05, 2025 01:50 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உளுந்து பயிர் சாகுபடியில் 'மஞ்சள் நோய்' வைரஸ் தாக்கி மகசூல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து, பச்சை பயிர் தெளித்து சாகுபடி செய்தனர். உளுந்து சாகுபடியில் கடும் வெயில் தாக்கம் காரணமாக ஒரு வகையான வைரஸ் நோய் ஏற்பட்டு 50 நாட்களில் இலைகளில் மஞ்சள் புள்ளி ஏற்பட்டது.
பின்னர் வைரஸ் நோய் வெள்ளை ஈக்களால் பரவி செடி முழுவதும் மஞ்சளாக மாறியுள்ளது. இதனால் செடி வளர்ச்சி தடைப்பட்டு, மஞ்சள் புள்ளி ஏற்பட்ட இலைகள் காய்ந்து கொட்டிவிடுகிறது.
செடிகளில் காய் பிடிக்கும் பருவத்தில் வைரஸ் நோய் தாக்கினால், காய் வளர்ச்சி அடையாமல், உளுந்து மற்றும் பச்சை பயிறு நிறம் குறைந்து, பருப்பின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் பருப்பு தரமற்றதாக மாறி விடுகிறது.
மஞ்சள் நோயிக்கு விவசாயிகள் பல முறை மருந்து அடித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், உளுந்து, பச்ச பயிறு சாகுபடியில் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, இழப்பீடு வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.