/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் பதிவு செய்ய அழைப்பு
/
விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் பதிவு செய்ய அழைப்பு
விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் பதிவு செய்ய அழைப்பு
விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் பதிவு செய்ய அழைப்பு
ADDED : நவ 09, 2025 06:18 AM
விருத்தாசலம்: பி.எம்., கிசான் நிதியுதவி பெறுவதற்கு, விவசாயிகள் அடையாள அட்டை எண் பெறுவது கட்டாயம் என கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
பி.எம்., கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
இனி வரும் காலங்களில் இந்த உதவி தொகையை பெறவும், வேளாண் துறை சார்ந்த திட்டங்களில் பயனடைய, தனித்துவ விவசாய அட்டையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆகையால், விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள அட்டை எண் பெற வேண்டியது அவசியம்.
அடையாள அட்டை பதிவு செய்ய உள்ள விவசாயிகள், தங்களின் ஆதார் அட்டை, சிட்டா, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசியுடன், தங்கள் பகுதி வேளாண் அலுவலகம் அல்லது பொதுசேவை மையத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
இனி வரும் காலங்களில் விவசாய அடையாள எண் பெற்ற விவசாயிகள் மட்டுமே பி.எம்., கிசான் மற்றும் அரசு வழங்கும் மானிய திட்டங்களை பெற்று பயனடையலாம்.
மேலும், இதுசம்பந்தமாக கம்மாபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

