/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
/
வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
ADDED : ஜூலை 05, 2025 03:23 AM

விருத்தாசலம்: கம்மாபுரம் அருகே வாய்க்கால் புறம்போக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுார் கிராம வாய்க்கால் புறம்போக்கில், அப்பகுதியை சேர்ந்த 100 குடும்பத்தினர் 300 ஏக்கர் பரப்பளவில் முப்போகம் சாகுபடி செய்து வருகின்றனர். நிலத்திற்கு சென்று வர வேறு வழி இல்லாததால், தர்மநல்லுார் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 18 ஆண்டுகளுக்கு முன் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 230 மீட்டர் தொலைவிற்கு வாய்க்காலை சமன் செய்து, பாதையாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாத்துக்கூடல் சக்திவேல், வாய்க்காலை சமன் செய்து பாதையாக மாற்றியதால், 15 ஏக்கர் நிலம், நீர் வடிகால் அமைப்பு இல்லாததால் வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஐகோர்ட் உத்தரவின் பேரில், தாசில்தார் அரவிந்தன் தலைமையிலான வருவாய்த்துறையினர், கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கினர். அதற்கு, விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பிரச்னை தொடர்பாக, கலெக்டரை சந்தித்து முறையிட அவகாசம் தேவை. அதன் பின், ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றனர். இதனையேற்ற அதிகாரிகள், கலைந்து சென்றனர்.