/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்காலை சொந்த செலவில் துார்வாரிய விவசாயிகள்
/
வாய்க்காலை சொந்த செலவில் துார்வாரிய விவசாயிகள்
ADDED : செப் 30, 2025 07:57 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், விவசாயிகள் சொந்த செலவில் வடிகால் வாய்க்கால்களை துார்வாரினர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் நடவு செய்தனர். இப்பகுதியில் பெய்த கனமழையால் விளக்கப்பாடி ஏரியின் மேற்கு கரையில் 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது.
இதனால், கவலையடைந்த விவசாயிகள் எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விளக்கப்பாடி ஏரியின் வடிகால் வாய்க்கால்களை துார்வார வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில், விவசாயிகள் தங்கள் சொந்த செலவில், நெற்பயிர்களை காப்பாற்ற ஹிட்டாஜ் இயந்திரம் வாடகை எடுத்து வாய்க்கால் துார்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மழைநீர் படிப்படியாக குறைந்து நெற்பயிர்கள் வெளியே தெரிந்தது.