/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைந்த விலைக்கு பச்சை பயிர் கொள்முதல்: விவசாயிகள் கவலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் அடாவடி
/
குறைந்த விலைக்கு பச்சை பயிர் கொள்முதல்: விவசாயிகள் கவலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் அடாவடி
குறைந்த விலைக்கு பச்சை பயிர் கொள்முதல்: விவசாயிகள் கவலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் அடாவடி
குறைந்த விலைக்கு பச்சை பயிர் கொள்முதல்: விவசாயிகள் கவலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் அடாவடி
ADDED : ஜூலை 09, 2025 08:11 AM
கடலுார் மாவட்டத்தில் சம்பா சாகுபடி நெல் அறுவடைக்கு பின் நெல் தரிசில் 4 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சைப்பயிர் சாகுபடி செய்தனர். பச்சைப்பயிர் அறுவடை துவங்கிய ஏப்ரல் மாதத்தில் 7,600க்கு ரூபாய்க்கு தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் படிப்படியாக 6,000 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். பச்சைப் பயிர் விலை மேலும் குறைந்து தனியார் வியாபாரிகள் அடிமாட்டு விலையாக 5,500 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டதால் ஏராளமான விவசாயிகள் பச்சைப்பயிர் பயிர் விற்பனை செய்யாமல் சுத்தம் செய்து வீட்டில் மூட்டையாக அடுக்கி வைத்துள்ளதால் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து பச்சை பயிர் கிலோ 86.82 பைசாவுக்கு (குவிண்டல் 100 கிலோ ரூ.8,682) குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த திட்டத்தில் கொள்முதல் செய்ய விளைந்த நிலத்தின் சர்வே எண், கம்ப்யூட்டர் சிட்டா, வி.ஏ.ஓ., விடம் இருந்து பெறப்பட்ட அடங்கல், விவசாயின் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து டோக்கன் பெற்று விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தில் காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. துவக்கத்தில் குறைந்த விவசாயிகளிடம் இருந்து ஆவணங்கள் பெற்று பச்சைப் பயிர் கொள்முதல் செய்யப்பட்டது.
பின்னர் ஒழுங்கு முறை விற்பனைக் கூட அதிகாரிகள், தனியார் வியபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விவசாயிகளிடம் ஆவணங்கள் சரியில்லை, பச்சைப் பயிர் சரியில்லை என, அலைக்கழிக்கப்பட்டு, அதிருப்தியில் எடுத்து சென்ற பொருளை திருப்பி எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் உரிய முறையில் கவனிக்கப்படுவதால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் ஆதிக்கம் அதிகரித்தது. தனியார் வியபாரிகள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் பல பெயர்களில் விவசாயிகள் என பதிவு செய்து அதிக விலைக்கு விற்கின்றனர்.
தற்போது வரை தனியார் வியாபாரிகளின் பச்சப் பயிர் மட்டுமே அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகள் பச்சைப் பயிர்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.