ADDED : மார் 05, 2024 06:15 AM
கடலுார்: கடலுாரில், தேசிய நெடுஞ்சாலை துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு கேட்டு முதியவர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்தவர் சாலமோன், 70; இவர், கடலுார் காமராஜர் சிலை அருகில் நேற்று தனது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, சிதம்பரம் பரமேஸ்வரநல்லுாரில் உள்ள இடம், சாலை விரிவாக்கத்திற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. ஆனால், இழப்பீடு வழங்கவில்லை. 2017ம் ஆண்டு முதல் அதிகாரிகளிடம் மனு அளித்தம் நடவடிக்கை இல்லை. இதனால், இழப்பீடு கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக சாலமோன் கூறினார்.
அவர்களை சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

