நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தலைவர் கனகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சிவானந்தம், துணைத் தலைவர் மணிகண்டன், துணை செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.
இதில், தொடர் முற்றுகை போராட்டத்தில் ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம் விரைவாக வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

