ADDED : பிப் 23, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் மகள் சந்தியா, 22; சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக குமளங்குளம் வீட்டிற்கு வந்திருந்த சந்தியாவை, கடந்த 20ம் தேதி இரவு முதல் காணவில்லை.
இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.