ADDED : ஏப் 18, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த பூண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகள் பிரியதர்ஷினி,18; திருபுவனையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் 15ம் தேதி வீட்டில் இருந்து வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.