ADDED : அக் 23, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகள் கீர்த்திகா, 19; வடலூர் தனியார் கல்லூரியில் எம்சிஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கியவர் அதிகாலை, 5:00 மணியளவில் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து முத்துசாமி கொடுத்துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.