UPDATED : ஆக 12, 2026 07:37 PM
ADDED : ஆக 12, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: மகளை, காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.பரங்கிப்பேட்டை அடுத்த சின்னுார் தெற்கு பகுதியை சேர்ந்தவர் விஜயன் மகள் யோகபிரியா, 22; இவர், பரங்கிப்பேட்டையில் உள்ள மாமா வீட்டில்தங்கி, சிதம்பரம் அரசு கல்லுாரியில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஆகஸ்ட் 11, வீட்டில் இருந்து வெளியே சென்ற யோகபிரயா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, விஜயன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, யோகபிரியாவை, தேடிவருகின்றனர்.
