UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:44 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: தந்தை திட்டியதால் பூச்சி மருந்து குடித்து மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த பெலாந்தோப்பை சேர்ந்தவர் விஜயகாந்த். விவசாயி. இவரது மகன் ரிஷிகாந்த்,15; நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
அவர் சரியாக படிக்காததால், கடந்த 16ம் தேதி கண்டித்தார். அதில், விரக்தியடைந்த ரிஷிகாந்த், அன்று இரவு வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
