தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தந்தை, மகனை தாக்கியவர் கைது

தந்தை, மகனை தாக்கியவர் கைது

தந்தை, மகனை தாக்கியவர் கைது


UPDATED : அக் 23, 2026 01:58 AM

ADDED : அக் 23, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 01:58 AM ADDED : அக் 23, 2026 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: வட்டியோடு கடனை திருப்பி கேட்டு தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்.50; விவசாயியான இவர், 2 ஆண்டிற்கு முன் அவியனுாரை சேர்ந்த சங்கர்,54; என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

கடந்த 21ம் தேதி சங்கர், சுந்தர்ராஜிடம் தான் கடன் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி கேட்டார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சங்கர், சுந்தராஜன் மற்றும் அவரது மகன் ஜெய்கணேஷ்,29; ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த சுந்தர்ராஜ், ஜெய்கணேஷ் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சங்கரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us