ADDED : அக் 23, 2026 04:32 AM

விருத்தாசலம்: தனியார் பள்ளி பஸ்சை வழிமறித்து, டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ராஜேஷ், 24. தனியார் பள்ளி பஸ் டிரைவர். நேற்று மாலை 4:00 மணியளவில், கோ.ஆதனுார் விநாயகர் கோவில் அருகே மாணவர்களை இறக்கி விட்டுள்ளார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் மதியழகன், 28, மதுபோதையில், பஸ்சை வழிமறித்தார். தட்டிக்கேட்ட டிரைவர் ராஜேைஷ திட்டி தாக்கியுள்ளார். தடுக்க வந்த பெண் உதவியாளரையும் ஆபாசமாக திட்டினார்.
பின்னர், அங்கிருந்து சென்ற மதியழகன், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜதுரை, 39, என்பவரை கட்டையால் தாக்கியுள்ளார். அதில், தலையில் காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருவேறு புகார்களின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, மதியழகனை கைது செய்தனர்.
