/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தந்தை - மகன் மோதல் விவகாரம்: பா.ம.க., தொண்டர்கள் குழப்பம்
/
தந்தை - மகன் மோதல் விவகாரம்: பா.ம.க., தொண்டர்கள் குழப்பம்
தந்தை - மகன் மோதல் விவகாரம்: பா.ம.க., தொண்டர்கள் குழப்பம்
தந்தை - மகன் மோதல் விவகாரம்: பா.ம.க., தொண்டர்கள் குழப்பம்
ADDED : ஆக 06, 2025 08:02 AM
கடந்த 2016ல் அன்புமணி தன்னை முன்னிலைப்படுத்தி 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கத்துடன் தொண்டர்களை சந்தித்தார். இந்த பிரசாரம் மற்ற கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது.
அன்புமணி அடுத்த கட்டமாக 2024 எம்.பி., தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தனது மனைவி சவுமியாவை வேட்பாளராக நிறுத்தி, மகள்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வைத்தார்.
இதில், பா.ம.க., தலைவர் ராமதாசிற்கு உடன்பாடு இல்லாமல் போனது. இதற்கு 'செக்' வைக்கும் வகையில் தனது மகள் வழி பேரன் முகுந்தனை அரசியலில் முன்னிலைப்படுத்தினார்.
இது அன்புமணிக்கு பிடிக்காததால், அப்போது முதல் தந்தை, மகன் இடையே விரிசல் ஏற்பட துவங்கியது.
அன்புமணி மீது ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவித்து வந்தாலும், அன்புமணி, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல், பா.ம.க., வை தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
கட்சியை கைப்பற்றுவதில் தந்தை, மகன் இடையே ஏற்பட்டுள்ள போட்டியால் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர். அன்புமணி தலைவர் என்ற முறையில் கட்சியின் பொதுக்குழு வரும் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நடக்கும் என அறிவித்தார்.
இதற்கு போட்டியாக ராமதாஸ், வரும் 17ம் தேதி பொதுக்குழு பட்டானுாரில் நடக்கும் என அறிவித்தார்.
இதில் யார் அழைப்பை ஏற்று கூட்டத்திற்கு செல்வது என கடலுார் மாவட்ட நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தந்தை-மகன் பிரச்னையை எப்படி சரி செய்வது என, மூத்த கட்சி நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.

