/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆடுகள் வாங்க சென்ற தந்தை, மகன் விபத்தில் பலி
/
ஆடுகள் வாங்க சென்ற தந்தை, மகன் விபத்தில் பலி
ADDED : டிச 27, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த ரூபநாராயணநல்லுாரைச் சேர்ந்த ஆடு வியாபாரிகள் விஜயன், 60, அவரது மகன் பிரகாஷ், 35. இருவரும் மதகடிபட்டு பகுதியில் ஆடுகள் வாங்க, பல்சர் பைக்கில் உளுந்துார்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
புறவழிச்சாலையில் சென்றபோது, நின்றிருந்த 'ஐச்சர்' லாரியின் பின்புறம் பைக் மோதியது. அதில் படுகாயமடைந்த இருவரும் அதே இடத்தில் இறந்தனர்.
லாரி டிரைவர் ஆலந்துறைப்பட்டு முருகானந்தம், 34, என்பவரை மங்கலம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

