ADDED : ஜூன் 22, 2026 03:24 AM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை:புவனகிரி அருகே தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
புவனகிரி அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 54; கட்டட தொழிலாளி. இவர், கடந்த 17ம் தேதி வடலுாருக்கு வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும், கிடைக்கவில்லை.
இதுகுறித்து, ரவியின் மகன் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
