ADDED : அக் 07, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பின் ஆண்டு விழா சேலத்தில் நடந்தது.
தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் வரவேற்றார். மூத்த தடகள வீரர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், தீனதயாளன், இணை செயலாளர் தர்மராஜ், துணை தலைவர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற வன அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தனர். தலைவர் தர்மலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மூத்த குடிமக்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அரசு பஸ் பாஸ் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தனி வரிசை அனுமதிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.