/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 04, 2025 07:27 AM

கடலுார் : கடலுாரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட கால அவகாசம் அளித்திட வேண்டும். அனைத்து காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பை ஏற்கனவே இருந்ததைப் போல 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று ஒரு மணி நேரம் முன்னதாக பணி வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், மாநில செயலாளர் பக்கிரிசாமி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன். நில அளவைத்துறை மாவட்ட செயலாளர் நீல்ராஜ், வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தினகரன், வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில தலைவர் திருமலைவாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், வரும் 6ம் தேதி, 42 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்களும் சென்னை ஆணையரகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.