/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தற்காலிக திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டைகள் சேமிப்பு தீவிரம்
/
தற்காலிக திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டைகள் சேமிப்பு தீவிரம்
தற்காலிக திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டைகள் சேமிப்பு தீவிரம்
தற்காலிக திறந்தவெளி கிடங்கில் நெல் மூட்டைகள் சேமிப்பு தீவிரம்
ADDED : அக் 04, 2025 07:27 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் உள்ள தற்காலிக திறந்தவெளி கிடங்கில், நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
மாவட்டத்தில் குறுவை அறுவடை தீவிரமடைந்ததால், கலெக்டர் உத்தரவின்படி 140 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்களை வாகன வாடகை, கூலியாட்கள் உள்ளிட்ட அதிக செலவினங்கள் இன்றி விற்பனை செய்து பயனடைந்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் குவிந்ததால், விருத்தாசலம் மார்க்கெட் க மிட்டிக்கு வழக்கத்திற்கு மாறாக நெல் வரத்து சரிந்தது. குறுவை அறுவடை முடிந்து, சம்பா சாகுபடி துவங்கும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்திருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. அவை, விருத்தாசலம் அடுத்த எருமனுார் சாலையில் உள்ள தற்காலிக திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திடீர் மழையால் மூட்டைகள் பாதிக்காத வகையில் தரையில் கட்டைகள் வைத்தும், மேல் பகுதியில் தார்பாய் போட்டு மூடி, பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அனுமதி கிடைத்ததும், இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த காலங்களில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு, புதுக்கோட்டை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு தலா 2 டன் வீதம் நெல் மூட்டைக ள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்.