/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்கலை., சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
/
பல்கலை., சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
ADDED : ஏப் 25, 2025 05:19 AM
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பினர் 16ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு அனைத்து பணப் பயன்களையும் வழங்க வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகை மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பூமா கோவில் அருகில் 16ம் நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் துரை, குமரவேல் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

