/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நோய் பாதித்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதியுதவி
/
நோய் பாதித்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதியுதவி
ADDED : அக் 03, 2024 11:12 PM
கடலுார்: தீவிர நோய் பாதிப்பு உள்ள கட்டுமான தொழிலாளர்கள், நிதியுதவி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுார் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராமு செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நிதியுதவி அளிக்கும் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிதியுதவி 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுவிக்கப்படும். நிதியுதவி பெறுவதற்கு தீவிர நோய் பாதிப்பு குறித்து சிவில் சர்ஜன் தரத்திற்கு மேற்பட்ட அரசு டாக்டரிடமிருந்து மருத்துவ சான்று பெற வேண்டும்.
தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆவணங்களுடன், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்துபயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

