/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
/
போக்குவரத்து அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
போக்குவரத்து அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
போக்குவரத்து அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 17, 2024 04:50 AM

விருத்தாசலம், : சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், மங்கலம்பேட்டை தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, பேரிடர் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.