/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 06, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; பெருமுளை முத்தையா கோவிலில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு மற்றும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலர் சக்திவேல், தலைமையிலான வீரர்கள் கோவில் பணியாளர்களுக்கு வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகள் மற்றும் தீ விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ ஏற்பட்டால் அவற்றை அணைக்கும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.