/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீத்தடுப்பு: துண்டு பிரசுரம் வழங்கல்
/
தீத்தடுப்பு: துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஏப் 18, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் தீயணைப்பு துறையினர் தீத்தடுப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் வீரர்கள் கடை வீதி, பஸ் நிறுத்தம், பெட்ரோல் பங்க், மக்கள் கூடும் இடங்களில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி பொதுமக்களிடம் தீத்தடுப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
தொடர்ந்து, சந்தைத்தோப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சேகர் முன்னிலையில் மாணவர் களுக்கு தீத்தடுப்பு குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.