/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீயணைப்பு மீட்பு பணிக்குழு பயிற்சி
/
தீயணைப்பு மீட்பு பணிக்குழு பயிற்சி
ADDED : ஏப் 10, 2025 01:34 AM

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு தொடர்பான பயிற்சி பட்டறை நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு தொடர்பான பயிற்சி பட்டறை நடந்தது. தாவரவியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில் துவங்கிய நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர் தனவேல் வரவேற்றார். அறிவியல் புல முதல்வர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். துறை தலைவர்கள் நடராஜன், சுமதி வாழ்த்துரை வழங்கினர்.
சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சிறப்புரையாற்றி, பயிற்சியை துவக்கி வைத்தார். இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

