ADDED : அக் 22, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா என போலீசார் சோதனை செய்தனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய பொருள்களை ரயிலில் பயணிகள் எடுத்துச் செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதை தடுக்க விருத்தாசலம் ரயில் நிலையத்தில், பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர்.