ADDED : செப் 04, 2025 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக்கல்லுாரியில் நடந்த 'முதலுதவி' சிகிச்சை அளிப்பதற்காக பயிற்சியில் முஸ்தபா பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பள்ளி மாணவர்களுக்கு 'முதலுஉதவி' குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
இதில் சிதம்பரம் முஸ்தபா பள்ளி மாணவர்கள் 41 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். அவசர சிகிச்சை பிரிவு பேராசிரியர் டாக்டர் திஞானம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அன்வர்அலி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.