ADDED : பிப் 03, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு- சி.என்.பாளையம் ஜோதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.
சி.என்.பாளையம் காமாட்சிப்பேட்டை ஜோதிவிநாயகர் விநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு,யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது.
மதியம் 12:00 மணிக்கு விநாயகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.1:00 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து,விநாயகருக்கு 108 சங்கு அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

