ADDED : நவ 24, 2024 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கம்மாபுரம் அடுத்த முதனை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில், நடந்த முகாமிற்கு, ஒன்றிய செயலாளர் பழனி சுரேஷ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மருத்துவர் ராஜேஷ், துணை அமைப்பாளர் மருத்துவர் செல்லையா, மாவட்ட தலைவர் மருத்துவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் ரங்கநாதன் வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
ஒன்றிய துணை செயலர் பன்னீர்செல்வம், ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.