தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிருஷ்ணசாமி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

கிருஷ்ணசாமி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

கிருஷ்ணசாமி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்


ADDED : செப் 08, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.

கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, ‘மாணவர்கள் தங்களின் கல்லுாரி வாழ்க்கையின் துவக்கத்திலேயே எதிர்கால கல்வி மற்றும் தொழில் இலக்குகளை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

கல்லுாரி துணை முதல்வர் ரகு வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புதுச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் கோகுல்ராஜ், ‘மாணவர்கள் தங்களின் கல்வி பயணத்தில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

விழாவில் கல்லுாரி செயலர் விஜயகுமார், கல்லுாரி முதல்வர் இளங்கோ, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர் மணிகண்டன் ஒருங்கிணைப்பில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

பேராசிரியர் சிவராமன் நன்றி கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us