ADDED : ஜூலை 13, 2026 03:56 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம், கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் மற்றும் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் மணிமேகலை தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
முதல்வர் மாலதி வரவேற்றார். கல்லுாரி செயலர் பாபு பங்கேற்று, மாணவர்களுக்கு, கல்வியின் அவசியம் குறித்தும், தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது குறித்தும் அறிவுரை வழங்கி பேசினார்.
கல்லுாரி கல்வி அதிகாரி அசோக்குமார் மற்றும் கல்வி குழும அனைத்து முதல்வர்கள், உதவி பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
