/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் மீன்கள் விலை விறுவிறு
/
கடலுாரில் மீன்கள் விலை விறுவிறு
ADDED : டிச 22, 2025 05:47 AM

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுார் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன் வாங்க அசைவ பிரியர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வந்திருந்தனர். மீன்கள் விலை வழக்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ வஞ்சிரம் 850 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரையிலும், வவ்வால் 600 முதல் 850 ரூபாய் வரையிலும், இறால் 250 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும், சங்கரா 500 ரூபாய், பாறை மீன் 500 ரூபாய், கனவா 300 ரூபாய், நண்டு 500 ரூபாய்க்கு விற்பனையானது.

