ADDED : ஜன 19, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே இரவில் படகில் படுத்திருந்த மீனவர், ஆற்றில் தவறி விழுந்து இறந்தார்.
ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் நம்பிராஜன்,45, மீனவர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தாழங்குடாவைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரது படகில் மீன்பிடி தொழில் செய்துவந்தார்.
கடந்த 17ம் தேதி இரவு படகில் படுத்து துாங்கியுள்ளார். அப்போது, உப்பனாற்றில் தவறிவிழுந்தார். அவரைத்தேடி வந்த நிலையில் நேற்று காலை நம்பிராஜன் உடல், கோரி வாய்க்கால் பகுதியில் கரை ஒதுங்கியது.
புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

