/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளங்கிராயன்பேட்டை அருகே மீனவர் உடல் மீட்பு
/
வேளங்கிராயன்பேட்டை அருகே மீனவர் உடல் மீட்பு
ADDED : டிச 18, 2024 06:22 AM
புதுச்சத்திரம் : கடலில் தவறி விழுந்த மீனவர் உடல் வேளங்கிராயன்பேட்டை அருகே கரை ஒதுங்கியது.
கடலுார் அடுத்த சித்திரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் ஜெகன், 30; மீனவர். இவர் கடந்த 15ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு கடலில் மீன் பிடிக்க சென்றவர், எதிர்பாராமல் கடலில் தவறி விழுந்தார்.
அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் பல்வேறு இடங்களில் தேடியும், எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டை கடற்கரையில், இறந்த நிலையில் ஜெகனின் உடல் நேற்று கரை ஒதுங்கியது.
தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.