/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடிநாள் நிதி வசூலிப்பு ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு
/
கொடிநாள் நிதி வசூலிப்பு ஆர்.டி.ஓ., துவக்கி வைப்பு
ADDED : டிச 08, 2024 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கொடிநாள் தினத்தை முன்னிட்டு நிதி வசூலிப்பு நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் ஊர்க்காவல் படை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தார். ஊர்க்காவல் படை கமாண்டர் (பொறுப்பு) கண்ணன் வரவேற்றார். ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் முதல் நிதியை வழங்கி, துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கொடி நாள் தினம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, பொது மக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது. படைப்பிரிவு தளபதி காணிக்கைராஜ் உட்பட ஊர்க்காவல் படை வீரர்கள் பலர் பங்கேற்றனர்.