/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு
/
தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு
ADDED : மார் 18, 2024 03:58 AM

திட்டக்குடி, : லோக்சபா தேர்தலை முன்னிட்டு திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து தொகுதிகளிலும், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதை முன்னிட்டு திட்டக்குடி தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில் டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி, சப்இன்ஸ்பெக்டர்கள் ஜம்புலிங்கம், ரவிச்சந்திரன், சுபிக் ஷா மற்றும் போலீசார், துணை ராணுவத்தினர் திட்டக்குடி வதிஷ்டபுரம் எம்.எல்.ஏ., அலுவலகத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல், ராமநத்தம் பகுதியிலும் துணை ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

