ADDED : மே 22, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது.
தமிழகம் முழுதும் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் நிறுவப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு செயல் அலுவலர் மயில்வாகனன் நோட்டீஸ் அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சி நிர்வாகிகள் ஒரு சில இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்களை தாமாகவே முன்வந்து அகற்றினர். இருப்பினும் அகற்றப்படாமல் இருந்த கொடி கம்பங்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.