/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளத்தால் உள்வாங்கிய பாலம்; கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து 'கட்'
/
வெள்ளத்தால் உள்வாங்கிய பாலம்; கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து 'கட்'
வெள்ளத்தால் உள்வாங்கிய பாலம்; கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து 'கட்'
வெள்ளத்தால் உள்வாங்கிய பாலம்; கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து 'கட்'
ADDED : டிச 06, 2024 07:15 AM

கடலுார் : கடலுார் கஸ்டம்ஸ் சாலையில் பாலம் உள்வாங்கியதால், வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலுாரில் இருந்து பகண்டை வரை உள்ள கஸ்டம்ஸ் சாலை வழியாக பண்ருட்டி மற்றும் விழுப்புரத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம், வெள்ளப்பாக்கம் உட்பட பல இடங்களில் ஆற்றின் கரையை தாண்டி தண்ணீர் கஸ்டம்ஸ் சாலையில் புகுந்தது. அந்த இடங்களில் சாலையில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் சென்றதால், கஸ்டம்ஸ் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மருதாடு கஸ்டம்ஸ் சாலையில் உள்ள பாலம் திடீரென நேற்று முன்தினம் உள்வாங்கியது. இதனால், கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மேல்பட்டாம்பாக்கம் அருகே 500 மீட்டர் தூரத்துக்கு கஸ்டம்ஸ் சாலையில் உடைப்பு ஏற்பட்டு, பாதியளவு தண்ணீரில் அடித்து சென்றுள்ளது.
இதனால், இச்சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்து, கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இருசக்கர வாகன ஓட்டிகளை தடுப்புகளை மீறி, ஆபத்தான முறையில் அப்பகுதியில் பயணிக்கின்றனர்.