/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்றில் வெள்ளம் கஸ்டம்ஸ் சாலை துண்டிப்பு
/
பெண்ணையாற்றில் வெள்ளம் கஸ்டம்ஸ் சாலை துண்டிப்பு
ADDED : டிச 03, 2024 06:37 AM

நெல்லிக்குப்பம்: பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கடலுாரில் இருந்து பகண்டை வரை உள்ள கஸ்டம்ஸ் சாலை வழியாக பண்ருட்டி மற்றும் விழுப்புரத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பெண்ணையாற்றில் வரலாறு காணாத வெள்ளம் செல்கிறது.
இதனால், விஸ்வநாதபுரம், வெள்ளப்பாக்கம் உட்பட பல இடங்களில் ஆ ற்றின் கரையை தாண்டி தண்ணீர் கஸ்டம்ஸ் சாலையில் புகுந்தது.
அந்த இடங்களில் சாலையில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் கஸ்டம்ஸ் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தும் பணியில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.