/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: நிரம்பிய அணைக்கட்டுகள்
/
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: நிரம்பிய அணைக்கட்டுகள்
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: நிரம்பிய அணைக்கட்டுகள்
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: நிரம்பிய அணைக்கட்டுகள்
ADDED : டிச 05, 2025 05:14 AM

வேப்பூர்: கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், காட்டுமயிலுார் மற்றும் மேமாத்தூர் அணைக்கட்டுகள் நிரம்பின.
வேப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களாக, தொடர் மழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.
இந்நிலையில், வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று நள்ளிரவு 5 மணி நேரத்திற்கு, தொடர் மழை பெய்தது.
இதனால் மயூரா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வேப்பூர் அடுத்த காட்டுமயிலுார் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தொடர்ந்து, 1,500 கன அடி தண்ணீர் மயூரா ஆற்றில் வெளியேறி வருகிறது.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியிலும், வேப்பூர் பகுதியிலும் பெய்த கனமழையில் மணிமுக்தா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று 300 கன அடி தண்ணீர் மணிமுக்தா ஆற்றில் சென்ற நிலையில், வேப்பூர் அடுத்த மேமாத்துார் அணைக்கட்டு நிரம்பி, தொடர்ந்து தண்ணீர் ஆற்றில் வெளியேறி வருகிறது.

