/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை ஓய்ந்தும் வயல்களில் வடியாத வெள்ளம்; சிதம்பரம், குமராட்சி விவசாயிகள் வேதனை

ADDED : டிச 17, 2024 07:11 AM

சிதம்பரம்; கடலுார் மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி முதல் பெய்த தொடர் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால், ஏரியில் இருந்து, வெள்ளியங்கால் ஓடையில், 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதே சமயம் மன வாய்க்காலில் இருந்து சுமார் 25 ஆயிரம் கன அடி மழைநீர் வெளியேறியதால், லால்பேட்டை, குமராட்சி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
தற்போது மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் குமராட்சி, புத்துார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது.
இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பயிர் காப்பீட்டுத் தொகையையும் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தனர்.