ADDED : மே 02, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாநகர அனைத்து பூ வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா மற்றும் மே தின விழா நடந்தது.
சங்க தலைவர் சிவசங்கர் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் மூர்த்தி, மணி, பெருமாண்டி, பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, குத்துவிளக்கேற்றி, சங்க பெயர்ப்பலகையை திறந்து வைத்தார்.
துணைத் தலைவர் குமரவேல், துணை செயலாளர் முரளி, துணை பொருளாளர் ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.