ADDED : ஜூலை 20, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:  கடலுாரில் ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகையையொட்டி பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.
ஆடி மாத பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை என அடுத்தடுத்து விசேஷ தினம் வருவதால், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில்பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. நேற்று குண்டுமல்லி கிலோ 480 முதல், 400 ரூபாய் வரைக்கும், முல்லை400, சாமந்தி 320, ரோஜா 240, பன்னீர் ரோஸ் 200, கனகாம்பரம் 600 ரூபாய்க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கிச் சென்றனர்.

