/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீவனப்பயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி
/
தீவனப்பயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : பிப் 05, 2024 04:23 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், கால்நடை வளர்ப்பில் மேலாண்மை முறைகள் மற்றும் தீவனப்பயிர்கள் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.
கால்நடை மருத்துவ பல்கலை., பேராசிரியர் மற்றும் தலைவர் சிலம்பரசன் கலந்து கொண்டு, கால்நடைகளின் இனங்கள், அவற்றிற்கான கொட்டகை அமைக்கும் முறைகள், தீவன மேலாண்மை முறைகள், இனப்பெருக்க மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பொருட்களில் எவ்வாறு மதிப்புக்கூட்டுதல் செய்வது, கால்நடைகளுக்கு தேவையான தீவன வகைகள், அதன் உற்பத்தி செலவுகள், பசும் தீவன செலவுகள், செலவுகளை குறைக்கும் வழிகள் குறித்து பேசினார்.
மேலும், சுகாதார முறையில் பால் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பெண்கள், கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்றனர்.

