ADDED : ஏப் 18, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பேக்கரியில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் ஆய்வு செய்தனர்.
நடுவீரப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள பேக்கரி கடையில் பாக்கெட் பொருட்களில் தயாரிப்பு தேதிகள் இல்லாமல் விற்பனை செய்வதாக கடலுார் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, உணவு பாதுகாப்பு அலுவலர் பத்மநாபன் தலைமையில் அலுவலர்கள் பேக்கரியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, சில பொருட்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கடைகளை சுத்தமாகவும், பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரித்து, பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.