ADDED : ஜன 18, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: பிச்சாவரம் வனத்துறை அலுவலக கண்ணாடியை உடைத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வனத்துறை சார்பில், சுற்றுலா பயணிகள் வனக்காடுகளை சுற்றிபார்க்க படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்த சபரிநாதன்,30; படகு சவாரி செய்ய டிக்கெட் கேட்டுள்ளார். டிக்கெட் கொடுக்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சபரிநாதன் வனச்சுற்றுலா அலுவலக கண்ணாடியை, உடைத்துள்ளார்.
இதுகுறித்து, வன அலுவலர் அருள்தாஸ் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, சபரிநாதனை கைது செய்தனர்.