/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மாஜி' முதல்வர் பிறந்த நாள் பொது மருத்துவ முகாம்
/
'மாஜி' முதல்வர் பிறந்த நாள் பொது மருத்துவ முகாம்
ADDED : மே 14, 2025 07:09 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த மதுராந்தகநல்லுாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி வடலுார் மித்ரா மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முருகுமணி, மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், துணை செயலாளர் வீரமூர்த்தி, மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பன், விநாயகமூர்த்தி, சீனிவாசன், முத்து, மாவட்ட மருத்துவ அணி தலைவர் கொளஞ்சிநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா, இணை செயலாளர் சுகந்தி ஆசைத்தம்பி, ஒன்றிய துணை செயலாளர் சுனிதாபாரதி, முன்னாள் சேர்மன் வள்ளி தில்லை மணி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மருத்துவரணி செயலாளர் பிரியதர்ஷன், மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராஜவர்மன் ஆகியோர் வரவேற்றனர்.
நகரசெயலாளர் சந்திரகுமார், சதீஷ், பூதங்குடி பாஸ்கரன், ஒன்றிய மகளிரணி சுபாஷினி, நந்தினி, வெங்கடேஸ்வரி, ரவிச்சந்திரன், பாஸ்கரன், சுதாகர், ஆனந்த் பங்கேற்றனர்.